Search This Blog

Showing posts with label Aandal (Nachiyaar Thirumozhi). Show all posts
Showing posts with label Aandal (Nachiyaar Thirumozhi). Show all posts

Tuesday, 29 October 2013

Nachiyaar Thirumozhi, 4, 5 - Divya Prabhandam

என்புஉருகி இனவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பலநாளும்
துன்பக் கடல்புக்கு  வைகுந்தன் நெஞ்பத் ஓர்
தோணி  பெறுது உழல்கின்றேன்
அன்புடை யாரைப்  பிரிவுறு  நோய்
அது நீயும்  அறிதி  குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணியண்னை  வரக் கூவாய்.    


- நாச்சியார்  திருமொழி , 4, 5

enpuru kiyina vEln^eduNG kaNgaL
imaiporun^ thaapala naaLum,
thunpak kadalpukku vaikuntha NnenpathOr
thONi peRaathuzhal kinREn,
anbudai yaaraip pirivuRu nOyathu
neeyu maRithi kuyilE,
ponpurai mEnik karuLak kodiyudaip
puNNiya Nnaivarak koovaay.    

- Nachiyaar Thirumozhi, 4, 5

Nachiyaar Thirumozhi, 6,8 - Divya Prabhandam

இம்மைக்கும் ஏழ்ஏழ்  பிறவிக்கும்  பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய  திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.   


- நாச்சியார்  திருமொழி , 6,8




immaikku mEzhEzh piRavikkum paRRaavaan,
nammaiyu daiyavan naaraaya Nannambi,
semmai yudaiya thirukkaiyaal thaaLpaRRi,
ammi mithikkak kanaakkaNdEn thOzheenaan.   

- Nachiyaar Thirumozhi, 6,8

Nachiyaar Thirumozhi, 14,4 - Divya Prabhandam

கார்த்தண்  கமலக்  கண் என்னும்  நெடுங்கயிறு படுத்தி ,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்  ஈசன்  தன்னைக்  கண்டீரே ?
போர்த்த  முத்தின்  குப்பாயப்  புகர்மால் யானைக் கன்றேபோல் ,
வேர்த்து நின்று விளையாட  விருந்தா வனத்தே  கண்டோமே.


- நாச்சியார்  திருமொழி , 14,4



kaarththaN kamalak kaNNennum  nedunkayi Rupaduth thi,ennai
Irththuk koNdu viLaiyaadum  Ican Rannaik kaNdeerE?
pOrththa muththin kuppaayap  pugarmaal yaanaik kanREpOl,
vErththu ninRu viLaiyaada  virunthaa vanaththE kaNdOmE.   

- Nachiyaar Thirumozhi, 14,4

Nachiyaar Thirumozhi, 13,6 - Divya Prabhandam

நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன்என்னும்  ,
கொடிய கடிய  திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு,
புடையும் பெயர  கில்லேன் நான் போதகன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர்என்   உடம்பையே .


- நாச்சியார் திருமொழி , 13,6


nadaiyon Rillaa vulagaththu nantha gOpan maganennum,
kodiya kadiya thirumaalaal  kuLappuk kooRu koLappattu,
pudaiyum peyara killEn naan pOtkan mithiththa adippaattil
podiththaan koNarnthu pooceergaL pOgaa vuyiren NnudambaiyE.   


- Nachiyaar Thirumozhi, 13,6

Nachiyaar Thirumozhi, 11, 5 - Divya Prabhandam

செம்மை உடைய திருவரங்கர்  தாம் பணித்த,
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டு இருப்பர்,
தம்மை  உகப்பாரைத்   தாம் உகப்பர் என்னும்சொல் ,
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆற்இனியே !  


- நாச்சியார்  திருமொழி , 11,10


cemmai yudaiya  thiruvarangar thaampaNiththa,
meymmaip peruvaarththai  vittuciththar kEttiruppar,
thammai yugappaaraith  thaamugappa rennumcol,
thammidaiyE poyyaanaal  caathippaa raariniyE !  

- Nachiyaar Thirumozhi, 11,10

Nachiyaar Thirumozhi, 1, 5 - Divya Prabhandam

வானிடை  வாழும்  அவ வானவர்க்கு
      மறையவர் வேள்வியில்  வகுத்த   ஆவி
    கானிடைத்  திரிவதோர்  நரிபுகுந்து
      கடப்பாடும் மோப்படும் செய்வடோப்ப
    ஊனிடை  ஆழி  சங்கு  உத்தமர்க்கு   என்று
      உன்னித்தெழுந்த   என்  தட  முலைகள்
    மானிடவர்க்கென்று  பேச்சுப்படில்
      வாழ கில்லேன்  கண்டாய்   மன்மதனே !


- நாச்சியார்  திருமொழி , 1, 5



vAniDai vAzhum avvAnavarkku
      maRaiyavar vELviyil vagutta avi
    kAniDait tirivadOr nari pugundu
      kaDappadum mOppadum ceyvadoppa
    ooniDai Azhi Sangu uttamaRku enru
      unnittu ezhunda yen taDa mulaigaL
    mAniDavarkku enru pEcchuppaDil
      vAzhakillEn kaNDai manmatanE!

- Nachiyaar Thirumozhi, 1, 5