Search This Blog

Showing posts with label Kulasekara Azhwar (Perumal ThirumMozhi). Show all posts
Showing posts with label Kulasekara Azhwar (Perumal ThirumMozhi). Show all posts

Tuesday, 29 October 2013

Perumal thirumozhi, 2. 2 - Divya Prabhandam

தோடு (உ)லாமலர்  மங்கைதோள் இணை
தேய்ந்ததும்சுடர்  வாளியால்
நீடுமாமரம்  செற்றதும் நிரைமேய்த்ததும்  
இவையே நினைந்து
ஆடிப் பாடி  அரங்கவோ! என்(று)  அழைக்கும்
தொண்ட ரடிப்போடி
ஆடனாம்பேறில்   கங்கை நீர் குடைந்(து)  ஆடும்
வேட்கைஎன்  ஆவதே              


- பெருமாள் திருமொழி ,  2. 2  


thOdulaamalar mangaithOL iNai
thEynthathumsudar vaaLiyaal
needumaamaram seRRathumnirai
mEyththumivai yEninainthu
aadippaadi arangavOenRazhaikkum
thoNda radippodi
aadanaampeRil kangaineer kudain thaadum
vEtkaiyen NnaavathE             

- Perumal thirumozhi,  2. 2

Perumal thirumozhi, 3.8 - Divya Prabhandam

பேயரே எனக்கு  யாவரும்  யானும்ஓர்
பேயனே  எவர்க்கும் இது  பேசிஎன்
ஆயனே! அரங்கா ! என்றழைக் கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரா னுக்கே               


- பெருமாள்  திருமொழி , 3.8



pEya rEyenak kiyaavarum yaanumOr
pEya NnEyevark kum_ithu pEsiyen
aaya NnEaraNG kaaenRa zhaikkinREn
pEya Nnaayozhin thEnempi raanukkE              

- Perumal thirumozhi, 3.8

Perumal thirumozhi, 4. 9. - Divya Prabhandam

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே!  வேங்கடவா!  நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்த(உ)ன்   பவளவாய்  காண்பேனே  


- பெருமாள் திருமொழி, 4.9

sediyaaya valvinaikaL theerkkum thirumaalE
netiyaanE vEngatavaa ninkOyi linvaasal
atiyaarum vaanavaru marampaiyarum kidanthiyangum
padiyaayk kidanthun pavaLavaay kaaNpEnE

- Perumal thirumozhi, 4.9

Perumal thirumozhi, 5. 5 - Divya Prabhandam

வெங்கந்திண் களிறடர்த்தாய்!   வித்துவக்கோட்டம்மானே !
எங்குப்போய்  உய்கேன் உன் இணை அடியே  அடையலல்லால்
எங்கும்போய்க்  கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே.     


- பெருமாள்  திருமொழி, 5. 5


vengaNthiN kaLiRatartthaay viRRuvakkOt tammaanE
enguppO yuykEnun NniNaiyatiyE yataiyalallaal
engumpOyk karaikaaNaa theRikadalvaay meeNdEyum
vangatthin koompERum maappaRavai pOnREnE                    

- Perumal thirumozhi, 5. 5

Perumal thirumozhi, 5. 9. - Divya Prabhandam

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும்  செல்வம்போல், மாயத்தால்
மின்னையே  சேர்திகிரி  வித்துவக்கோட்டம்மா!
நின்னையே  தான்வேண்டி நிற்பன் அடியேனே             


- பெருமாள் திருமொழி , 5. 9


ninnaiyE thaanvENdi neeLselvam vENdaathaan
thannaiyE thaanvENdum selvampOl maayaththaal
minnaiyE sErthigiri viRRuvakkOt tammaanE
ninnaiyE thaanvENdi niRpa NnatiyEnE            

- Perumal thirumozhi, 5. 9

Perumal thirumozhi, 4. 2. - Divya Prabhandam

ஆணாத  செல்வத்(து) அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும்  செல்வமும்  மண்ணரசும்  யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே      


- பெருமாள் திருமொழி,  4.2



678:
aanaatha selvath tharampaiyarkaL thaRkuzha
vaanaaLum selvamum maNNarasum yaanvENdEn
thEnaar pooNchOlaith thiruvEnga dassunaiyil
meenaayp piRakkum vithiyudaiyE NnaavEnE      


- Perumal thirumozhi, 4.2


Perumal thirumozhi, 1. 9. - Divya Prabhandam

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம்குழுமித்  திருப்புகழ்கள்  பலவும்பாடி
ஆராத மனக்களிப்போ(டு)  அழுத கண்ணீர்
மழைசோர நினைந்(து) உருகி  ஏத்தி நாளும்
சீர்ஆர்ந்த  முழுவோசை பரவை காட்டும்
திருவரங்கத்  தரவணையில் பள்ளிகொள்ளும்
போர்ஆழி  அம்மானைக்  கண்டு துள்ளிப்
பூதலத்தி  என்று கொலோ  புரளும்  நாளே?


- பெருமாள்  திருமொழி, 1. 9.




thooraatha manakkaathal thoNdar thangaL
kuzhaamkuzhumith thiruppukazhgaL palavum paadi
aaraatha manakkaLippO tazhutha kaNNeer
mazhaisOra ninainthuruki yEththi naaLum
seeraarntha muzhuvOsai paravai kaattum
thiruvaranga tharavaNaiyil paLLi koLLum
pOraazhi yammaanaik kaNdu thuLLip
poothalaththi lenRukolO puraLum naaLE                   

- Perumal thirumozhi, 1. 9.