Search This Blog

Tuesday, 29 October 2013

Thiruppaavai, 29 : Divya Prabhandam


சிற்றஞ்சிறுகாலே  வந்(து) உன்னைச்  சேவித்து * உன்
பொற்றாமரை  அடியே  போற்றும்  பொருள்  கேளாய்  *
பெற்றம்  மேய்த்து  (உ)ண்ணும்  குலத்தில்  பிறந்து  * நீ
குற்றேவல்  எங்களைக்  கொள்ளாமல்  போகாது  *
இற்றைப்  பறைகொள்வான்  அன்று  காண்  கோவிந்தா  *
எற்றைக்கும்  ஏழ்ஏழ்  பிறவிக்கும்  * உன்  தன்னோடு
உற்றோமே  ஆவோம்  உனக்கே  நாம்  ஆட்செய்வோம்  *
மற்றை நம்  காமங்கள்  மாற்(று)  ஏலோர்  எம்பாவாய்.


-திருப்பாவை, 29.



502:
cirranj ciRu kaalE vanthunnai cEviththu * un
poRRaamarai atiyE pORRum poruL kELaay *
peRRam mEyththu uNNum kulaththil piRanthu * nI
kuRREval eNGkaLaik koLLaamal pOkaathu *
iRRaip paRai koLvaan anRu kaaN kOvin^thaa *
eRRaikkum Ezh Ezh piRavikkum * un thannOtu
uRROmE aavOm unakkE naam aatceyvOm *
maRRai nam kaamaNGkaL maaRRu ElOr empaavaay. (2) 29.


-Thiruppaavai, 29



Nachiyaar Thirumozhi, 4, 5 - Divya Prabhandam

என்புஉருகி இனவேல் நெடுங்கண்கள்
இமை பொருந்தா பலநாளும்
துன்பக் கடல்புக்கு  வைகுந்தன் நெஞ்பத் ஓர்
தோணி  பெறுது உழல்கின்றேன்
அன்புடை யாரைப்  பிரிவுறு  நோய்
அது நீயும்  அறிதி  குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணியண்னை  வரக் கூவாய்.    


- நாச்சியார்  திருமொழி , 4, 5

enpuru kiyina vEln^eduNG kaNgaL
imaiporun^ thaapala naaLum,
thunpak kadalpukku vaikuntha NnenpathOr
thONi peRaathuzhal kinREn,
anbudai yaaraip pirivuRu nOyathu
neeyu maRithi kuyilE,
ponpurai mEnik karuLak kodiyudaip
puNNiya Nnaivarak koovaay.    

- Nachiyaar Thirumozhi, 4, 5

Nachiyaar Thirumozhi, 6,8 - Divya Prabhandam

இம்மைக்கும் ஏழ்ஏழ்  பிறவிக்கும்  பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய  திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.   


- நாச்சியார்  திருமொழி , 6,8




immaikku mEzhEzh piRavikkum paRRaavaan,
nammaiyu daiyavan naaraaya Nannambi,
semmai yudaiya thirukkaiyaal thaaLpaRRi,
ammi mithikkak kanaakkaNdEn thOzheenaan.   

- Nachiyaar Thirumozhi, 6,8

Nachiyaar Thirumozhi, 14,4 - Divya Prabhandam

கார்த்தண்  கமலக்  கண் என்னும்  நெடுங்கயிறு படுத்தி ,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்  ஈசன்  தன்னைக்  கண்டீரே ?
போர்த்த  முத்தின்  குப்பாயப்  புகர்மால் யானைக் கன்றேபோல் ,
வேர்த்து நின்று விளையாட  விருந்தா வனத்தே  கண்டோமே.


- நாச்சியார்  திருமொழி , 14,4



kaarththaN kamalak kaNNennum  nedunkayi Rupaduth thi,ennai
Irththuk koNdu viLaiyaadum  Ican Rannaik kaNdeerE?
pOrththa muththin kuppaayap  pugarmaal yaanaik kanREpOl,
vErththu ninRu viLaiyaada  virunthaa vanaththE kaNdOmE.   

- Nachiyaar Thirumozhi, 14,4

Nachiyaar Thirumozhi, 13,6 - Divya Prabhandam

நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன்என்னும்  ,
கொடிய கடிய  திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு,
புடையும் பெயர  கில்லேன் நான் போதகன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர்என்   உடம்பையே .


- நாச்சியார் திருமொழி , 13,6


nadaiyon Rillaa vulagaththu nantha gOpan maganennum,
kodiya kadiya thirumaalaal  kuLappuk kooRu koLappattu,
pudaiyum peyara killEn naan pOtkan mithiththa adippaattil
podiththaan koNarnthu pooceergaL pOgaa vuyiren NnudambaiyE.   


- Nachiyaar Thirumozhi, 13,6

Nachiyaar Thirumozhi, 11, 5 - Divya Prabhandam

செம்மை உடைய திருவரங்கர்  தாம் பணித்த,
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டு இருப்பர்,
தம்மை  உகப்பாரைத்   தாம் உகப்பர் என்னும்சொல் ,
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆற்இனியே !  


- நாச்சியார்  திருமொழி , 11,10


cemmai yudaiya  thiruvarangar thaampaNiththa,
meymmaip peruvaarththai  vittuciththar kEttiruppar,
thammai yugappaaraith  thaamugappa rennumcol,
thammidaiyE poyyaanaal  caathippaa raariniyE !  

- Nachiyaar Thirumozhi, 11,10

Perumal thirumozhi, 2. 2 - Divya Prabhandam

தோடு (உ)லாமலர்  மங்கைதோள் இணை
தேய்ந்ததும்சுடர்  வாளியால்
நீடுமாமரம்  செற்றதும் நிரைமேய்த்ததும்  
இவையே நினைந்து
ஆடிப் பாடி  அரங்கவோ! என்(று)  அழைக்கும்
தொண்ட ரடிப்போடி
ஆடனாம்பேறில்   கங்கை நீர் குடைந்(து)  ஆடும்
வேட்கைஎன்  ஆவதே              


- பெருமாள் திருமொழி ,  2. 2  


thOdulaamalar mangaithOL iNai
thEynthathumsudar vaaLiyaal
needumaamaram seRRathumnirai
mEyththumivai yEninainthu
aadippaadi arangavOenRazhaikkum
thoNda radippodi
aadanaampeRil kangaineer kudain thaadum
vEtkaiyen NnaavathE             

- Perumal thirumozhi,  2. 2

Perumal thirumozhi, 3.8 - Divya Prabhandam

பேயரே எனக்கு  யாவரும்  யானும்ஓர்
பேயனே  எவர்க்கும் இது  பேசிஎன்
ஆயனே! அரங்கா ! என்றழைக் கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரா னுக்கே               


- பெருமாள்  திருமொழி , 3.8



pEya rEyenak kiyaavarum yaanumOr
pEya NnEyevark kum_ithu pEsiyen
aaya NnEaraNG kaaenRa zhaikkinREn
pEya Nnaayozhin thEnempi raanukkE              

- Perumal thirumozhi, 3.8

Perumal thirumozhi, 4. 9. - Divya Prabhandam

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே!  வேங்கடவா!  நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்த(உ)ன்   பவளவாய்  காண்பேனே  


- பெருமாள் திருமொழி, 4.9

sediyaaya valvinaikaL theerkkum thirumaalE
netiyaanE vEngatavaa ninkOyi linvaasal
atiyaarum vaanavaru marampaiyarum kidanthiyangum
padiyaayk kidanthun pavaLavaay kaaNpEnE

- Perumal thirumozhi, 4.9

Perumal thirumozhi, 5. 5 - Divya Prabhandam

வெங்கந்திண் களிறடர்த்தாய்!   வித்துவக்கோட்டம்மானே !
எங்குப்போய்  உய்கேன் உன் இணை அடியே  அடையலல்லால்
எங்கும்போய்க்  கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே.     


- பெருமாள்  திருமொழி, 5. 5


vengaNthiN kaLiRatartthaay viRRuvakkOt tammaanE
enguppO yuykEnun NniNaiyatiyE yataiyalallaal
engumpOyk karaikaaNaa theRikadalvaay meeNdEyum
vangatthin koompERum maappaRavai pOnREnE                    

- Perumal thirumozhi, 5. 5

Perumal thirumozhi, 5. 9. - Divya Prabhandam

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும்  செல்வம்போல், மாயத்தால்
மின்னையே  சேர்திகிரி  வித்துவக்கோட்டம்மா!
நின்னையே  தான்வேண்டி நிற்பன் அடியேனே             


- பெருமாள் திருமொழி , 5. 9


ninnaiyE thaanvENdi neeLselvam vENdaathaan
thannaiyE thaanvENdum selvampOl maayaththaal
minnaiyE sErthigiri viRRuvakkOt tammaanE
ninnaiyE thaanvENdi niRpa NnatiyEnE            

- Perumal thirumozhi, 5. 9

Perumal thirumozhi, 4. 2. - Divya Prabhandam

ஆணாத  செல்வத்(து) அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும்  செல்வமும்  மண்ணரசும்  யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே      


- பெருமாள் திருமொழி,  4.2



678:
aanaatha selvath tharampaiyarkaL thaRkuzha
vaanaaLum selvamum maNNarasum yaanvENdEn
thEnaar pooNchOlaith thiruvEnga dassunaiyil
meenaayp piRakkum vithiyudaiyE NnaavEnE      


- Perumal thirumozhi, 4.2


Perumal thirumozhi, 1. 9. - Divya Prabhandam

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம்குழுமித்  திருப்புகழ்கள்  பலவும்பாடி
ஆராத மனக்களிப்போ(டு)  அழுத கண்ணீர்
மழைசோர நினைந்(து) உருகி  ஏத்தி நாளும்
சீர்ஆர்ந்த  முழுவோசை பரவை காட்டும்
திருவரங்கத்  தரவணையில் பள்ளிகொள்ளும்
போர்ஆழி  அம்மானைக்  கண்டு துள்ளிப்
பூதலத்தி  என்று கொலோ  புரளும்  நாளே?


- பெருமாள்  திருமொழி, 1. 9.




thooraatha manakkaathal thoNdar thangaL
kuzhaamkuzhumith thiruppukazhgaL palavum paadi
aaraatha manakkaLippO tazhutha kaNNeer
mazhaisOra ninainthuruki yEththi naaLum
seeraarntha muzhuvOsai paravai kaattum
thiruvaranga tharavaNaiyil paLLi koLLum
pOraazhi yammaanaik kaNdu thuLLip
poothalaththi lenRukolO puraLum naaLE                   

- Perumal thirumozhi, 1. 9.




Nachiyaar Thirumozhi, 1, 5 - Divya Prabhandam

வானிடை  வாழும்  அவ வானவர்க்கு
      மறையவர் வேள்வியில்  வகுத்த   ஆவி
    கானிடைத்  திரிவதோர்  நரிபுகுந்து
      கடப்பாடும் மோப்படும் செய்வடோப்ப
    ஊனிடை  ஆழி  சங்கு  உத்தமர்க்கு   என்று
      உன்னித்தெழுந்த   என்  தட  முலைகள்
    மானிடவர்க்கென்று  பேச்சுப்படில்
      வாழ கில்லேன்  கண்டாய்   மன்மதனே !


- நாச்சியார்  திருமொழி , 1, 5



vAniDai vAzhum avvAnavarkku
      maRaiyavar vELviyil vagutta avi
    kAniDait tirivadOr nari pugundu
      kaDappadum mOppadum ceyvadoppa
    ooniDai Azhi Sangu uttamaRku enru
      unnittu ezhunda yen taDa mulaigaL
    mAniDavarkku enru pEcchuppaDil
      vAzhakillEn kaNDai manmatanE!

- Nachiyaar Thirumozhi, 1, 5

Sunday, 27 October 2013

Thiruppaavai, 28 : Divya Prabhandam

கறவைகள் பின்  சென்று  கானம்  சேர்ந்து  உண்போம் *
அறிவொன்றும்     இல்லாத  ஆய்க்குலத்து  உன்தன்னை
பிறவி  பெருந்தனை  புண்ணியம்  யாம்  உடையோம்  *
குறைவொன்றும்  இல்லாத  கோவிந்தா  * உன்தன்னோ(டு)
உறவேல் நமக்கிங் கொழிக்க  ஒழியாது  *
அறியாத  பிள்ளைகளோம்  அன்பினால்  * உன்  தன்னைக்
சிறுபேர்  அழைத்தனவும்  சீறி   அருளாதே  *
இறைவா! நீ  தாராய்  பறை  ஏலோர்  எம்பாவாய் .
-திருப்பாவை, 28.



501:
kaRavaikaL pin cenRu kaanam cErnthu uNpOm *
aRivu onRum illaatha aaykkulaththu * unthannaip
piRavi peRun thanaip puNNiyam yaam utaiyOm *
kuRai onRum illaatha kOvinthaa * un thannOtu
uRavEl namakku iNGku ozhikka ozhiyaathu *
aRiyaatha piLLaikaLOm anpinaal * unthannai
ciRupEr azhaiththanavum cIRi aruLaathE *
iRaivaa! nI thaaraay paRai ElOr empaavaay. (2) 28.


-Thiruppaavai, 28



Thiruppaavai, 5 : Divya Prabhandam


மாயனை  மன்னு  வடமதுரை  மைந்தனை *
தூய  பெருநீர் யமுனைத் துறைவனை  *
ஆயர்குலத்தினில்  தோன்றும்  அணிவிளக்கை   *
தாயைக் குடல்விளக்கம் செய்த  தாமோதரனை  *
தூயோமாய்  வந்து  நாம்  தூமலர்  தூவித்  தொழுது  *
வாயினால்  பாடி  மனத்தினால்  சிந்திக்கப்  *
போய  பிழையும்  புகுதருவான்  நின்றனவும்  *
தீயினில்  துசாகும்  செப்பு  ஏலோர்  எம்பாவாய்.
-திருப்பாவை, 5.



maayanai mannu vatamathurai main^thanaith *
thUya perunIr yamunaith thuRaivanai *
aayarkulaththinil thOnRum aNiviLakkaith *
thaayaik kutal viLakkam ceytha thaamOtharanaith *
thUyOmaay van^thu naam thUmalar thUvith thozhuthu *
vaayinaal paati manaththinaal cin^thikkap *
pOya pizhaiyum pukutharuvaan ninRanavum *
thIyinil thUcaakum ceppu ElOr empaavaay.

-Thiruppaavai, 5




Thiruppaavai, 3 : Divya Prabhandam

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம்பாவைக்குச்  சாற்றி நீராடினால் *
தீங்கின்றி நாடெல்லாம்  திங்கள்  மும்மாரிபெய்து  *
ஓங்கு பெருஞ் செந்நெல்  ஊடு  கயலுகளப்
பூங்குவளைப்  போதில்  பொறிவண்டு  கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து  சீர்த்த   முலைபற்றி
வாங்கக்குடம்  நிறைக்கும்  வள்ளல்  பெரும்  பசுக்கள்  *
நிங்காத செல்வம்  நிறைந்து  ஏலோர்  எம்பாவாய்  


-திருப்பாவை, 3.



476:
ONGki ulakaLan^tha uththaman pEr paati *
naaNGkaL nam paavaikkuc caaRRi nIraatinaal *
thINGkinRi naatellaam thiNGkaL mummaari peythu *
ONGku peRuNY cen^n^el Utu kayal ukaLap *
pUNGkuvaLaip pOthil poRi vaNtu kaNpatuppath *
thENGkaathE pukkirun^thu cIrththa mulai paRRi
vaaNGkak * kutam niRaikkum vaLLal perum pacukkaL *
nINGkaatha celvam niRain^thu ElOr empaavaay.


-Thiruppaavai, 3




Thiruppaavai, 1 : Divya Prabhandam

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சிர்மல்கும் ஆய்ப்பாடிக்  செல்வச் சிருமிர்கால்!
கூர்வேல் கொடுந்  தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர்ஆர்ந்த  கண்ணி  யசோதை  இளஞ்சிங்கம்
கார்மேனிச்  செங்கண்  கதிர்மதியம்  போல்  முகத்தான்
நாராயணனே  நமக்கே  பறை  தருவான்  
பாரோர்  புகழப்  படிந்(து)  ஏலோர்  எம்பாவாய்.



-திருப்பாவை, 1.



maarkazhith thiNGkaL mathiniRaintha nannaaLaal *
nIraatap pOthuvIr! pOthuminO nErizhaiyIr! *
cIrmalkum aayppaatic celvac ciRumIrkaaL! *
kUrvEl kotun thozhilan nanthakOpan kumaran *
Eraarntha kaNNi yacOthai iLaNYciNGkam *
kaarmEnic ceNGkaN kathir mathiyam pOl mukaththaan *
naaraayaNanE namakkE paRai tharuvaan *
paarOr pukazhap patinthu ElOr empaavaay.


-Thiruppaavai, 1



Saturday, 26 October 2013

Periyaazhwaar Thirumozhi, 5. 4. 5 : Divya Prabhandam

பொன்னைக் கொண்டு  (உ)ரைகள் மீதே நிறமெழ
             உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி  
             உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டுஎன்னுள் வைத்தேன் என்னையும்
உன்னில் இட்டேன்
என் அப்பா! என் இருடீகேசா!
உயிர்க்  காவலனே!  


- பெரியாழ்வார் திருமொழி, 5.4.5.



ponnaik koNdu uraikal meedhE niRamezha
             vuraiththaaRpOl
unnaik koNdu en naavakampaal maaRRinRi
             uraiththuk koNdEn
unnaik koNduennuL vaiththEn ennaiyum
 unnilittEn
ennappaa! ennirudeekEsaa!
uyirk kaavalanE!            


- Periyaazhwaar Thirumozhi, 5.4.5.

Periyaazhwaar Thirumozhi, 5.4.2 : Divya Prabhandam

பறவைஏறு   பரம் புருடா! நீ  என்னைக்  கைக்கொண்டபின்
பிறவிஎன்னும்  கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்
இறவுசெய்யும்  பாவக்காடு தீக்கொளீ  இ  வேகின்றதால்
அறிவைஎன்னும்  அமுதஆறு   தலைப்பற்றி  வாய்க்கொண்டதே.    


- பெரியாழ்வார் திருமொழி, 5.4.2.



464:
paRavaiyERu param purudaa! nee ennaik kaikkoNdapin
piRaviyennum kadalum vaRRip perumpadham aakinRadhaal
iRavuseyyum paavakkaadu theekkoLee i vEkinRadhaal
aRivaiy ennum amudhavaaRu thalaippaRRi vaaykkoNdadhE.    

- Periyaazhwaar Thirumozhi, 5.4.2.